மாயன் – திரை விமர்சனம்

ஐடி துறையில் பணியாற்றும் வினோத் மோகன் அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரர். குறிப்பாக சகிப்புத்தன்மை மிக்கவர். அலுவலகத்தில் சிற்சில நேரங்களில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டாலும் அதை சிரித்த முகத்தோடு கடந்து போகிறவர். அவரது ஒரே லட்சியம் சொந்தமாய் ஒரு வீடு வாங்கி அதில் தனது அம்மாவை குடியமர்த்துவது தான். இந்நிலையில் நாயகனுக்கு வரும் மின்னஞ்சல் ஒன்றில், 13 நாட்களில் இந்த உலகம் அழியப்போகிறது மாயனின் பிள்ளை என்பதால் உனக்கு இதை தெரியப்படுத்துகிறோம். எக்காரணம் கொண்டும் இந்த தேவ ரகசியத்தை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என அதில் கண்டிஷனும் போடப்பட்டு இருக்கிறது. முதலில் இதை வினோத் மோகன் நம்பவில்லை. ஆனால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அவரை நம்ப வைக்கிறது. இதனால் எப்படியும் உலகம் அழியப்போகிற இந்த கொஞ்ச நாட்களுக்குள் எத்தனை மகிழ்ச்சியாக வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து விடுவோம் என்ற…

Read More

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்துக்கு இசையால் உயிர்ப்பூட்டிய திபு நினன் தாமஸ்!

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது சிறந்த இசையமைப்பால் இந்திய இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் வெளியான படங்களில் ‘கனா’, ‘பேச்சுலர்’ படத்தின் ‘அடியே’ பாடல், சித்தார்த்தின் ‘சித்தா’ என அடுத்தடுத்து இவர் இசையமைப்பில் வெளியான படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, 2024 ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘ARM’ மலையாளப் படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். அவர் மெல்லிசைகளில் தான் அதிகம் கவனம் செலுத்துவார் என்ற எண்ணத்தை உடைத்து, ‘டீசல்’ படத்தில் கானா ஸ்டைலில் ‘பீர் சாங்’ மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.…

Read More