திரைத்துறையில் சிறந்த சாதனையைத் தொடர்ந்து எஸ்.ஜெ.சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்!

திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா கலந்து கொள்கிறார். இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட திரு. எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது. வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தென் இந்திய அளவில் சிறந்த…

Read More

‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியது – ஜி.வி.பிரகாஷ்குமாரின் புதிய படம்!

நடிகர் அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ போன்ற த்ரில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாறன். இப்போது, ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். இயக்குநர் மு. மாறன் கூறும்போது, ​​“திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அவர் தனது டப்பிங் தொடங்கி இருக்கிறார். விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்”…

Read More