சிரஞ்சீவியின் அடுத்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்: SLV சினிமாஸுடன், “தசரா” இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா புதிய படம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்.  அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார்.  நம்பிக்கைக்குரிய வளரும்  இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம், அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா” மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பரவலான பாராட்டையும் பெற்றது. பல மதிப்புமிக்க விருதுகளையும் இயக்குநர் வென்றார். சிரஞ்சீவி உடனான அவரது இந்தத் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.  ஸ்ரீகாந்த் ஒடேலா  மிகவும் ஸ்பெஷலான இந்த திரைப்படம் குறித்து, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேச்சுரல் ஸ்டார் நானியின் யுனானிமஸ்…

Read More

“தயாரிப்பாளர் c.v.குமார் தமிழ் சினிமாவின் சொத்து” -சூது கவ்வும் -2 பட விழாவில் நடிகர் மிர்சி சிவா புகழாரம் !!

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்…

Read More