பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம், தொலைக்காட்சி தொடர்கள் என பல்வேறு கலை சார்ந்த பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் மலேசியாவில்’காரசாரம்’ என்கிற பெயரில் உணவகத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. மலேசியாவில் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற உணவகமாக இந்த காரசாரம் உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மலேசியாவின் புகழ்பெற்ற காரசாரம் உணவகம் இந்தியா மற்றும் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, துபாய், லண்டன் உள்பட பிற நாடுகளிலும் தொடங்க இருக்கிறது என்று உணவக உரிமையாளர் டத்தோ சரவணன் தெரிவித்திருக்கிறார். இந்த உணவகம் தமிழர்களின் கலாச்சார உணவுகளை அதன் தன்மை மாறாமல் , அதன் மருத்துவகுணங்கள் குறையாமலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உணவகத்தில் மண்சட்டிச்சோறு, என்கிற உணவு மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.…
Read MoreDay: December 11, 2024
ஓடிடி தளத்தில் வெளியானது விமலின் சார் திரைப்படம்
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார். இதைத் தொடர்ந்து ‘சார்’ என்ற படத்தை இயக்கினார். இதில் விமல் நாயகனாகவும் சாயாதேவி நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். வில்லன் கதாபாத்திரத்தில் சிராஜ் நடித்து இருந்தார். இனியன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு, ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய, சித்து குமார் இசையமைக்க மற்றும் கலை பணிகளை பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.. எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிட்டது. இந்த படம் அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பரம்பரையின் அர்ப்பணிப்பை அழகான பாடமாக உணர்த்தியது. இப்படத்தை பத்திரிகையாளர்கள்…
Read More