காதலர் தினக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ள அதர்வா பட டைட்டில் அறிவிப்பு!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, #STR49 படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார். கல்லூரியில் நடந்த விழாவினில் இப்படத்தின் டைட்டில் டீசர் ஒளிபரப்பட்டபோது, ரசிகர்களின் உற்சாக கூச்சல் விண்ணைப் பிளந்தது.…

Read More

‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ படத்தை வெளியிட உள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதை என்ன? பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும்…

Read More