“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது. ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா – சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர். இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்…
Read MoreDay: March 10, 2025
படவா – திரை விமர்சனம்
ஊருக்கு ஆகாதவன் அந்த ஊருக்கே சிறப்பு சேர்த்த கதை.எக்காரணம் கொண்டும் வேலை செய்யக் கூடாது என்ற முடிவில் இருப்பவர் விமல். வேலை செய்யப் போகிறவர்களையும் தடுத்து விடுவார். சூரியுடன் சேர்ந்து வெட்டியாக ஊர் சுற்றுவது, நள்ளிரவில் பட்டாசு வெடித்து ஊர் மக்களை பீதி ஆக்குவது, கண்ணில் பட்ட பொருட்களை திருடி விற்பது என ஜாலியாக சுற்றித் திரிகிறார். அந்த ஊருக்கே அவரால் தலைவலி. சொந்த அக்கா வீட்டிலேயே ஏமாற்றி பணத்தை ஆட்டை போடுவதால் அக்கா குடும்பமும் அவரைப் பார்த்தால் அலறுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், ஆட்குறைப்பில் அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக, மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார்.விமலை கண்டாலே பயந்து ஓடும்…
Read More