சென்னை: பிரபல தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் **”வஞ்சி”**, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை **ராஜேஷ் C.R** இயக்க, **பின்சீர்** ஒளிப்பதிவு செய்துள்ளார். **சஜித் சங்கர்** இசையமைத்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணியை **ஜெயகிருஷ்ணன்** மேற்கொள்கிறார். **ராஜேஷ்** ஹீரோவாக நடிக்க, **நயீரா நிகார்** ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், **மாஸ்டர் ராஜநாயகம்**, **நட்டி நடராஜன்**, மற்றும் பல முன்னணி கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். **கதையின் மையக்கரு** வஞ்சி திரைப்படம், தமிழ்நாடு-கேரளா மலைப்பகுதிகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் நேரும் உயிர்பலிகள், அரசு வழங்கும் பாதுகாப்பு, மற்றும் ஒரு பெண்ணின் போராட்டம் ஆகியவை கதையின் மூலக் கருவாக அமைந்துள்ளன. **நயீரா நிகார் – பெண்ணின் வீரத்தைக் காட்டும் நடிப்பு** படத்தில் நயீரா நிகார் தன்னம்பிக்கையுடன் வாழும்…
Read MoreDay: March 12, 2025
ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா?
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா. எஸ் தயாரித்துள்ளார். அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளார். இந்த’ ராபர்’ திரைப் படத்தின்’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வாங்கி வெளியிடுகிறார். இந்த படத்தில் நாயகனாக சத்யா நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க…
Read More