பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார் நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர் நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

‘கார்த்திகேயா 2’ படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான ‘சுயம்பு’ இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகர் நிகில் இதற்கு முன்பு பார்த்திராத கதாபாத்திரத்தில் வலுவான போர் வீரராக நடிக்கிறார். இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் இருவரும் இணைந்து பிக்சல் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். தாகூர் மது இந்த படத்தை வழங்குகிறார். போர் பின்னணியில் செங்கோல் ஏந்தியபடி நிகில் மற்றும் சம்யுக்தா இருவரும் இருக்கும்படி ‘சுயம்பு’ படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை நிகில் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நிகில் தீவிரமாகவும் வலுவானவராகவும் போர்க்களத்தின் நடுவில் வாளேந்தி நிற்கிறார்.…

Read More

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘அக்யூஸ்ட்’ இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.…

Read More