“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப்…

Read More

டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா ‘ படங்கள் பெரிய வெற்றி பெற்றுக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘கரிகாடன்’ படத்தின் டீசரும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசர் பார்வையாளர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கவனிக்க வைக்கிறது. மாறுபட்ட வகைமையில் ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக ‘கரிகாடன் ‘ உருவாகியுள்ளது. இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய்…

Read More

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, தான் நடித்த “பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மகிழ்கிறார்! 56’வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள இரு படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’, மற்றொன்று அப்புக்குட்டி நடித்த ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அப்புக்குட்டிக்கு, அதன் பிறகு தற்போது நடித்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்! இந்தத் தருணத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் இயக்குனர் ராஜு சந்ரா, தயாரிப்பாளர் ரோஜி மேத்யூ மற்றும் தனக்கு கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா அனில் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவிக்கிறார்… அதேபோல், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘ஆநிரை’ குறும்பட…

Read More

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’…

Read More

நாயகன் – திரை விமர்சனம்

சில படங்கள் மட்டுமே நேற்றும் இன்றும் நாளையும் ரசிகர்களின் ரசனைப் பட்டியலில் இருக்கும்.அப்படி ஒரு படமே நாயகன். வெளி வந்து 39 ஆண்டுகளுக்கு பிறகும் அதன் மெருகு மாறாமல் அதன் உணர்வும் மாறாமல் திரைக்கு வந்து இருக்கிறது நாயகன். நடிகர் கமல்ஹாசனுக்கு நாயக பிம்பத்தை உறுதி செய்த படம் இது. மும்பையில் கோலோச்சிய வரதராஜ முதலியார் வாழ்க்கை பின்னணியை கதையாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.(சினிமாவுக்காக வேலு நாயக்கர்) அதில் நாயகனாக தன்னை முழுசாக பொருத்திக்கொண்டார் கமல். மக்களால் வாழ்பவன் தலைவன் அல்ல. மக்களுக்காக வாழ்பவனே தலைவன். அப்படி வாழ்ந்த வரதராஜ முதலியார் சரித்திரத்தில் படம் முழுக்க வரதராஜ முதலியாராகவே வாழ்ந்து நடிப்பு சரித்திரம் படைத்திருந்தார் கமல். சரி கதைக்கு வருவோம். ஒரு மனிதனை சூழ்நிலை எப்படி குற்றவாளியாக மாற் றுகிறது?அதே மனிதன் மக்களின் இதயத்தில் எப்படி தெய்வமாக உயர்கிறான்…

Read More