செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

அஸ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்… கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி கிராமத்தைச் சார்ந்த அஸ்வினி என்ற இளம் இயக்குனரின் முதல் குறும்படம் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை.. யாரும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறள் மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து இக்குறும்படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.. இக்குறும்படத்தை பற்றி இயக்குனர் அஸ்வினி மற்றும் மணிவண்ணன் கூறியதாவது: நாங்கள் இந்த குறும்படத்தை எடுக்க முக்கிய காரணம் யாரும் கெட்ட வார்த்தையே உறவுகளுக்கு இடையே பேசக்கூடாது என்பது தான்.. இதில் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read More

‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல திரையரங்குகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த…

Read More

யோகிபாபு – விஜய் விஷ்வா –  சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் ‘சாரா

நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி  இயக்கியுள்ளார். இப்படத்தில் சாக்ஷி அகர்வால்,  தங்கதுரை,  அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சாரா’ படத்தின் டிரெய்லரை திரையிட்டு குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். இத்துடன், அங்கு நடிகர் நெப்போலியனின் பிறந்தநாளை உணவு வழங்கி கொண்டாடினர். அத்துடன், சமீபத்தில் மரணமடைந்த மறைந்த…

Read More

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது

வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைமுக நோக்கங்கள், கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் என கதை முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருக்கும். 40 நிமிட குறும்படமாக இருந்த இந்த கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்திற்கு பின்பு திரைப்படமானது. குறும்படமாக இருந்த கதையை முழு திரைக்கதையாக மாற்ற தேவையான ஒழுக்கம், நேர்மை மற்றும் உழைப்பு என அனைத்தையும் படக்குழு வழங்கியது. இயக்குநர் மிதுனின் தந்தை…

Read More

அங்கம்மாள் — திரை விமர்சனம்

பிடிவாத குணம் கொண்டவள் கிராமத்து அங்கம்மாள். அவளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்குத் திருமணமாகி ஏழு வயதில் மகள் இருக்கிறாள். மனைவி வீட்டோடு இருக்கிறாள். டிவிஎஸ் சேம்ப்பில் வீடு வீடாகச் சென்று பால் வியாபாரம் செய்யும் அங்கம்மாள் இரண்டாவது மகனை டாக்டர் ஆக்கி விடுகிறாள். அவள் ஜாக்கெட் அணிவதில்லை. எதற்கும் அஞ்சாத குணம் அவளது தனித்துவம். அதனால் அவளுக்கு எதிர் பேச்சு பேச ஊர்க்காரர்கள் பயப்படுவார்கள். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கிற மாதிரி எதையும் முகத்துக்கு நேரே கேட்டு விடுவதால் அவளைக் கண்டால் அனைவருக்கும் பயம். டாக்டருக்கு படித்த இளைய மகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். பெண் வீட்டார் வேற்று மதம். இருப்பினும் சம்மதிக்கிறார்கள். இப்போது இளைய மகனின் ஒரே பிரச்சினை, இதுவரை ஜாக்கெட் அணியாத அம்மாவை எப்படியாவது தனது திருமணத்துக்குள் ஜாக்கெட் அணிய சம்மதிக்க…

Read More

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!

அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது. இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத்துக்கு அவர் எழுதிய சக்திவாய்ந்த திரைக்கதை பெரும் வரவேற்பு பெறும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் அதிக கவனத்துடன்…

Read More