உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ – நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

   எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், கதைக்களம், நட்சத்திரங்களின் பங்களிப்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் எம். மூர்த்தி பேசியதாவது, “நான் முதலில் நடிகராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். இன்று தயாரிப்பாளராக…

Read More

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘தர்மன்’ படக்குழுவில் மற்றொரு அசாத்திய திறமைசாலியான ஸ்ரீலீலா இணைந்திருப்பது, இத்திரைப்படத்தின் உலகம் பிரகாசமாகவும், பிரம்மாண்டமாகவும் விரிவடைவதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கம், அனிருத் ரவிச்சந்தரின் இசை, அன்பரிவின் சண்டை பயிற்சி என புகழ்பெற்ற கலைஞர்களின் சக்திவாய்ந்த கூட்டணி, தொலைநோக்கு பார்வை கொண்ட கதைசொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றோடு உருவாகும் ‘தர்மன்’, திரை ரசிகர்களுக்கு பெருவிருந்தாக தயாராகி வருகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் ‘தர்மன்’, தொடர்ந்து பல நட்சத்திரங்களை கூட்டணியாக இணைத்து தன் பயணத்தைத் தொடர்கிறது.

Read More

ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

தேசியம், நவம்பர் 3, 2026: தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் ஒரு நகரத்தில், சில விஷயங்களை விட்டுப் பிரிவது மற்றவற்றை விட மிகவும் கடினமானது. மனோஜ் பாஜ்பாய், போமன் இரானி மற்றும் திவ்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’, தான் நேசிக்கும் வீட்டைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கத்திற்கும் எதிராகத் தனி மனிதராகப் போராடும் ஒருவரின் கதையைச் சொல்கிறது. மும்பையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பை காலி செய்ய மறுக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியரைப் பற்றிய விறுவிறுப்பான இந்தத் திரைப்படம், மறுமேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பெரும் தொகையைப் பொருட்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை மையமாகக் கொண்டுள்ளது. இத்திரைப்படம் நவம்பர் 6, 2026 அன்று ஹிந்தி ZEE5-ல் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளது. ராணா டகுபதி அவர்களின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பில், பென் ரேகி…

Read More

மர்ம முடிச்சுகளுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’! – நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… *நடிகை அனுபமா பேசியதாவது:* “‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான, ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குள் செல்லும்போது நீங்கள் ஒரு நபராக இருப்பீர்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிச்சயமாக இன்னொரு நபராக மாறியிருப்பீர்கள். அந்த அளவுக்கு இப்படம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார். *நடிகர் படவா கோபி பேசியதாவது:* “இந்தப் படத்தில் என்னுடைய குரலைப் பற்றிப்…

Read More