விவேகம் – விமர்சனம்

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முழுநீள Action | Adventure | SpyThriller Genereல் வெளிவந்த்திருக்கும் முதல் படம்.
தான் அசைந்தாலே ஆர்ப்பரிக்க காத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகன் தன்னை உயிராய் நேசிக்கும் ரசிகர்களுக்காக உடலை வருத்திக்கொண்டு செய்துள்ள உச்சபட்ச மரியாதையே இப்படம்.

அஜித் படம் முழுவதும் அழகாய் ரம்மியமாய் இருக்கிறார். தல ரசிகர்களுக்கு அஜித் அழகு விருந்து கொடுத்திருக்கிறார் ரசிகர்கள் கண் கொட்டாமல் பார்த்தவண்ணம் இருப்பார்கள்

நாடி நரம்பு ரத்தம் சதை அனைத்திலும் அஜித்தை ரசிக்கும் ஒரு இயக்குனராலேயே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரை பொருத்தி காட்சிகளை அமைக்க முடியும்.
அதை கச்சிதமாய் செய்து ஹாட்ரிக் அடித்துள்ளார் சிவா.
படத்தின் சில இடங்களில் இது கிராஃபிக்ஸ் என அப்பட்டமாய் தெரிந்தாலும் பல காட்சிகளில் நிஜம் எது CG எது என கணிக்க முடியாதபடி அமைத்திருப்பது சிறப்பு.
இதுவரை வெளிவந்த படங்களிலேயே மிக அதிகமான துப்பாக்கி தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இப்படமாய்த்தான் இருக்கும்… ஆனால் அதை காட்சிப்படுத்தியுள்ள விதத்தில் இருக்கிறது இயக்குநரின் சாமர்த்தியம்.
அக்க்ஷராஹாசன் பாத்திரமும் அதை அவர் செய்துள்ள நேர்த்தியும் அருமை.
அந்த பாப்-கார்னிவல் காட்சியில் தன் தோளில் விழும் விரல்களின் அழுத்தத்திலேயே அது தன் கணவர்தான் என்பதை வெளிப்படுத்தும் காட்சி ஒன்று போதும் காஜல்அகர்வால் அருமையான நடிகை என்பதை நிரூபிக்க…
விவேக்ஓபராயை தேர்வு செய்ததில் நிற்கிறது அந்த நண்பன் கேரக்டர்.
மூச்சுவிடுவதை மறக்கடிக்கும் திரைக்கதைக்கு எடிட்டரின் பணி அபாரம்.
காட்சிகளின் பிரமாண்டத்தில் கலை இயக்குநரின் பங்களிப்பு பரவசப்படுத்துகிறது.
தேர்ந்தெடுத்துள்ள லொகேஷன்களிலேயே படம் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது.
பிண்ணனி இசையில் ச்சும்மா பூந்து விளையாடி இருக்கிறார் அனிருத்.⚘
சில இடங்களில் ஏன் எப்படி என தோன்றுவதை தனது வேகமான திரைக்கதையால் மறக்கடித்துவிடுகிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் வெற்றி இப்படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்று விட்டார்.
லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தின் வேகம் எதையும் யோசிக்க விடாமல் செய்துவிடுகிறது.
ஆங்கிலப்படங்களுக்கு இணையாக ஹாலிவுட் தரத்தில் என இதுவரை பலபடங்களுக்கு சொல்லப்பட்டு வந்தாலும் முதல் முறையாய் அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளமைக்காகவே மறுபடியும் இன்னொருமுறை பார்க்கலாம்.
Final Word : its AJITH’s ONE MAN SHOW👍

Related posts

Leave a Comment

four × two =