இன்றைய ராசிபலன்கள் 30/08/2017

மேஷம்

தேவையில்லாத டென்சனும் கவலையும் உங்கள் வாழ்வில் சாராம்சத்தை வடியச் செய்து உங்களை சாய்த்துவிடும். இவற்றை ஒழித்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பிரச்சினைகளை இவை அதிகரிக்கும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். நண்பர்களுடன் அதிக ஈடுபாடு காட்டி வீட்டில் அல்லது படிப்பில் அதிக கவனம் காட்டாத காரணத்தால் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். உங்கள் வேலையை கவனியுங்கள். உள்ளே வந்து உதவி செய்ய முன்வருபவர்களை இன்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்களை சிறிது தர்ம சங்கடமான நிலைக்கு இன்று உங்கள் துணை தள்ளக்கூடும், ஆனால் பிறகு அது உங்களது நன்மைக்கே என்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம்

அழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். வீட்டில் பிரச்சினைகள் எழக் கூடும் – ஆனால் சிறிய விஷயங்களுக்காக துணைவரை குறைசொல்வதைத் தவிர்த்திடுங்கள். இன்று ஆபிசில் உங்கள் மொபைல் போனால் சில ப்ரச்சனைகள் தோன்றலாம். எனவே அதனை அதிகம் இன்று பயன்படுத்த வேண்டாம். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். இன்று நாள் நல்ல முறையில் செல்ல வேண்டும் என்றால் உங்கள் துணை மூட் அவுட் ஆக இருக்கும் போது மௌனம் காப்பது சிறந்தது.

அதிர்ஷ்ட எண்: 4

மிதுனம்

திறந்து வைத்திருக்கும் உணவை சாப்பிடாதீர்கள், அது நோயை வரவழைக்கலாம். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். சொத்து பிரச்சினைகள் ஏற்படலாம். சாத்தியமானால் சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். சட்டபூர்வமாக தலையிடுவது ஆதாயம் தராமல் போகலாம். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். உங்களுடன் இதுவரை நட்புடன் பழகாத ஒருவர் இன்று உங்களிடம் அன்பாக பேசுவார் சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. சாதாரண திருமண வாழ்க்கைக்கு இடையில் இன்று மிக இனிப்பான நாள்..

அதிர்ஷ்ட எண்: 2

கடகம்

இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. இன்று ஆபீசில் நாள் முழுவதும் நீங்கள் சிறிது மன கலக்கத்துடன் இருக்க கூடும். இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள் – ஆனால் பாராட்டக் கூடிய விஷயங்களுக்கு மட்டும். திருமண வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதிலும் சில் குறைகள் இருக்கவே செய்கிறது. இன்று அது இரண்டையும் நீங்கள் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம்

ஓய்வு முக்கியமானதாக இருக்கும் நாள் – சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இத அவசியம் – பொழுதுபோக்கும் மனமகிழ் நிகழ்வுகளும் நீங்கள் ரிலாக்ஸ் பண்ண உதவும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகை உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். அதை எதிர்பார்த்து ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடுங்கள். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். வேலையை பற்றி கவலை படுவதால் எந்த பயனும் வாழ்க்கை விலை மதிப்பற்றது. இன்று உங்களின் பொறுமயை சோதிக்கும் நிலை ஏற்படலாம்.. சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். சண்டையும் செக்சும் மட்டுமே திருமண வாழ்க்கை என சிலர் நினைக்கலாம். ஆனால் இன்று அனைதுமே உங்களை பொறுத்தமட்டில் இனிமை தான்.

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி

நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. மகிழ்ச்சிகரமான மாலைப் பொழுதிற்காக தங்கள் இடத்திற்கு உங்களை நண்பர்கள் அழைப்பார்கள். உங்கள் பார்ட்னர் இல்லாத நேரத்தில், இருப்பை உணர்வீர்கள். சிலருக்கு பிசினஸ் மற்றும் கல்வியில் ஆதாயம் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைக்கும் இன்று ஒரு இனிமையான தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 2

துலாம்

பிறருடன் கூடிப் பழகுவதில் உள்ள பயம் உங்களுக்கு பதற்றமாக இருக்கலாம். அதை நீக்குவதற்கு தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. மாலையில் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள் – அது நிறைய நல்லதை செய்யும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். சிறிது காலம் நீங்கள் சொந்தக் காலில் நிற்பது போல தோன்றுகிறது – சகாக்கள் / அசோசியேட்கள் உங்கள் உதவிக்கு வரலாம் – ஆனால் அதிக உதவி செய்ய முடியாமல் போகலாம். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். ஒரே வீட்டில் ஒருவருடன் இணைந்து வாழும்போது சண்டைகள் ஏற்படுவது இயல்பு. இன்று உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம்

வேலையில் அழுத்தமும் வீட்டில் இணக்கமின்மையும் சிறிது அழுத்தத்தை உருவாக்கலாம். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று உங்கள் காதல் வாழ்வில் ஒரு இனிமையான திருப்பத்தை சந்திப்பீர்கள். காதல் வசப்பட்டு சொர்கத்தில் மிதக்கும் உணர்வை பெறும் நாளிது. உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு

உங்கள் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் – முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் – மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள் – உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 4

மகரம்

ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் – ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் – உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். உங்கள் வெற்றி இடையூறு செய்ய நினைப்பவர்கள் இன்று உங்கள் கண் எதிரே மோசமான வீழ்ச்சியை சந்திப்பார்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம்

நிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குடும்பத்தினர் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை உணர்த்துவதற்கு வார்த்தைகளாலும், வார்த்தைகள் இல்லாத செயல்களிலும் மெசேஜ்களை வெளிப்படுத்துங்கள். மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மதிப்புமிக்க உங்களின் பரிசு / அன்பளிப்புகளால் உற்சாகமான நேரங்களை உருவாக்க முடியாமல் போனாலும், உங்கள் காதலரால் அது புறந்தள்ளப்படலாம். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்

அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் – ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உங்களின் கூடுதல் தாராள நடத்தையை உறவினர்கள் அதிகமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பார்கள். உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏமாற்றப்படுவீர்கள். ஓரளவுக்கு தாராள மனது நல்லது னால் அது வரம்பு மீறினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காதலில் மனவேதனையை இன்றைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். இன்று, உங்கள் துணையுடன் ஏற்பட்ட பிணக்கு இனிமையான நினைவுகளை நினைவு கூர்வதால் தீரும். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

Related posts

Leave a Comment

eight − four =