இன்றைய ராசிபலன்கள் 2/9/2017

மேஷம்

இன்று உங்கள் உடல் லனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்களை குழப்பமடையச் செய்யும். உங்களுடன் இதுவரை நட்புடன் பழகாத ஒருவர் இன்று உங்களிடம் அன்பாக பேசுவார் சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. ரொமான்ட்டிக் பாடல்கள், மணம் வீசும் மெழுகுவத்திகள், உற்சாக பானம் என இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடன் இன்பம் தான்.

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம்

உங்கள் டென்சனில் இருந்து விடுபடுவீர்கள். ஊகங்கள் பேரழிவாக அமையும் – எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் சிறிது காலம் நீங்கள் சொந்தக் காலில் நிற்பது போல தோன்றுகிறது – சகாக்கள் / அசோசியேட்கள் உங்கள் உதவிக்கு வரலாம் – ஆனால் அதிக உதவி செய்ய முடியாமல் போகலாம். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய இன்று இனிமையான நாள்.

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம்

நல்ல உடல் வடிவை பெறுவதற்கு பிட்னெஸும் எடை குறைப்பு முயற்சிகளும் உதவும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் – உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

கடகம்

தகராறு செய்யும் உங்கள் நடத்தையால் பகைவர்களின் பட்டியல் நீளும். நீங்கள் பின்னர் வருந்தக் கூடிய அளவுக்கு மற்றவர்கள் கோபம் கொள்ளாதிருக்கட்டும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். அன்புக்குரியவர் உடன் இல்லாததால் ஒரு வெறுமையான அனுபவத்தை உணர்வீர்கள். வேலையை பொறுத்த வரையில் இன்று எந்த ப்ரச்சனையுமின்றி இனிமையாக இருக்கும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்களை சிறிது தர்ம சங்கடமான நிலைக்கு இன்று உங்கள் துணை தள்ளக்கூடும், ஆனால் பிறகு அது உங்களது நன்மைக்கே என்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம்

நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். இன்று தனிமையாக உணர்வீர்கள், தனியாக இருப்பீர்கள் – தனிமைப்படுத்தப்பட்ட உணர்வே புத்திசாலித்தனமான முடிவை எடுக்க விடாமல் தடுக்கும். உங்கள் பார்ட்னர் இல்லாத நேரத்தில், இருப்பை உணர்வீர்கள். உங்கள் வேலை சூழலில் இன்று ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணையின் மிக ரொமான்டிக் மறு பக்கத்தை இன்று காண்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி

உங்களின் கடுமையான நடத்தையால் நண்பருக்கு சில பிரச்சினை ஏற்படலாம். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். குடும்பத்தினர் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை உணர்த்துவதற்கு வார்த்தைகளாலும், வார்த்தைகள் இல்லாத செயல்களிலும் மெசேஜ்களை வெளிப்படுத்துங்கள். மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருடன் கடுமையாக நடந்து கொள்வதால் இருவருக்கும் இடையில் இணக்கத்தைப் பாதிக்கும். உங்கள் தொழில் வளத்தை மேம்படுத்த தொழில் திறமையைப் பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை பெறப் போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7

துலாம்

உங்களுடைய பாசிட்டிவ் எண்ணம் மற்றும் நம்பிக்கையால் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். பழைய நண்பர் ஒருவர் உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. இன்று, இவ்வளவு அற்புதமான துணையை பெற்றது பற்றி நீங்கள் பெருமை கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம்

உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். உங்கள் அழகான இயல்பும், நல்ல பர்சனாலிட்டியும் புதிய நண்பர்களை உருவாக்கவும் தொடர்புகளை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் – குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. வேலையை பற்றி கவலை படுவதால் எந்த பயனும் வாழ்க்கை விலை மதிப்பற்றது. இன்று உங்களின் பொறுமயை சோதிக்கும் நிலை ஏற்படலாம்.. கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். அனினும் இந்த நிலை பழையபடி திரும்பும்.

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு

புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். ஆனால் நீங்கள் வேலை செய்வதாக இருந்தால் உங்கள் பிசினஸ் டீலிங்கில் கவனமாகப் பார்க்க வேண்டும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணங்கள் ஏன் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்று இன்று நீங்கள் உணர்வுபூர்வமாக தெரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

மகரம்

உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். ஜன்னலில் பூக்களை வைப்பதன் மூலம் உங்கள் காதலைக் காட்டுங்கள். இன்று ஆபீசில் சிறிது ப்ரச்சினை தோன்றலாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய கூடும். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

கும்பம்

இன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். ஆனால் குடும்பத்தினரின் உதவியால் அவற்றை உங்களால் தீர்க்க முடியும். இதெல்லாம் வாழ்வில் சகஜம். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. எல்லோருக்கும் எல்லா நேரமும் சூரிய வெளிச்சமாகவோ அல்லது மேகம் மூடிய இருளாகவோ இருந்துவிடாது. உங்கள் காதல் வாழ்கை இன்று உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். உங்களது நல்ல நன்பர் ஒருவர் இன்று உங்களை கோபமூட்டும் வகையில் நடக்க கூடும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று உங்கள் துணை ஒரு ஸ்பெஷலான பரிசை உங்களுக்கு அளிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்

பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்களை அறியாமல் உங்கள் கருத்துகள் வேறொருவரின் சென்டிமெண்டை காயப்படுத்தலாம். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் – அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறை காட்டும் நபர்களுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள். எந்த புதிய திட்டத்தையும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை துணை அதனை இன்று உறுதிப்படுத்துவார்.

அதிர்ஷ்ட எண்: 4

Related posts

Leave a Comment

five − 4 =