அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கட்சி பதவி பறிப்பு: தினகரன் நடவடிக்கை

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் பொறுப்பில் உள்ள வெல்லமண்டி நடராஜன், பொருளாளர் பொறுப்பில் உள்ள மலைக்கோட்டை அய்யப்பன், ஜங்‌ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி, திருவெறும்பூர் பகுதி செயலாளர் கோபால்ராஜ், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், துவாக்குடி அவைத் தலைவர் மோகன்தாஸ், செயலாளர் பாண்டியன் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராக எம்.எஸ்.ராமலிங்கம், பொருளாளராக திரிசங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவராக தினேஷ்பாபு, மாவட்ட துணைத் தலைவர்களாக சிந்தை சரவணன், ஸ்ரீராம், மாவட்ட செயலாளராக உறையூர் மணிவண்ணன், இணைச் செயலாளராக மாரியப்பன், பீமநகர் சுரேஷ், ஒத்தக்கடை கோபி செழியன், சித்ரா, துணைச் செயலாளராக புத்தூர் வேளாங்கண்ணி நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜங்‌ஷன் பகுதி செயலாளராக கருமண்டபம் ஞானசேகர், திருவெறும்பூர் பகுதி செயலாளராக முருகானந்தம், ஒன்றிய அவைத் தலைவராக அண்ணாத்துரை, ஒன்றிய செயலாளராக ஆனந்தராஜ், இணைச் செயலாளராக ராதா அழகர்சாமி, நியமிக்கப்பட்டுள்ளனர்.

துவாக்குடி அவைத்தலைவராக ஆனந்தன், நகர செயலாளராக ராஜா, கூத்தைப்பார் பேரூராட்சி கழக அவைத் தலைவராக பிரபாகரன், பேரூராட்சி செயலாளராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம் மாற்றப்பட்டு ராஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமிக்கு பதில் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் கூத்தையாவுக்கு பதில் செல்லக்கண்ணுவும், குண்டாண்டார் கோவில் ஒன்றிய செயலாளர் பால்ராஜுக்கு பதில் அண்ணாதுரையும், புதுக்கோட்டை நகர செயலாளர் பாஸ்கருக்கு பதில் வீரமணியும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் அரியலூர் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment