காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த போலீசார் மீது சில தீவிரவாதிகள் எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தினர். போலீசார் மீது துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பலியானார். இரண்டு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
அந்த பகுதியில் நாளை, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகளை சந்தித்து பேச உள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.