போக்குவரத்து ஊழியர்கள் செப் – 24 முதல் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிவடைந்தும், புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை.

எனவே, புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று பல்லவன் இல்லத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுImage result for chennai MTC strike  images.

அதில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 24-ம் தேதி வேலை நிறுத்தம் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும். செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்தே வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் இதே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிட்டு பின்னர் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்பொழுது வரும் செப்டம்பர் முதல் தேதிக்குள் இப்பிரச்சனை தீர்த்துவைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஊதிய அறிவிப்பு பற்றி அரசு எந்த ஒரு முன்னேற்ற அறிவிப்பும் இறுதி செய்யப்படாத நிலையில் நாள் முன்னதாக வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts

Leave a Comment

four × 2 =