ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: பட்டியல் அறிவிப்பு

இந்திய அணி சமீபத்தில் இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிக்கு, இந்த நான்கு பேருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 17-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தது ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டுள்ளார். அதற்குப் பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் மொகமது ஷமி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அஸ்வின், ஜடேஜாவின் ஓய்வு தொடர்கிறது. யுவராஜ் சிங் மற்றும் ரெய்னாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. மணீஷ் பாண்டே, 6. கேதர் ஜாதவ், 7. ரகானே, 8. டோனி, 9. ஹர்திக் பாண்டியா, 10. அக்சார் பட்டேல், 11. குல்தீப் யாதவ், 12. சாஹல், 13. பும்ரா, 14. புவனேஸ்வர் குமார், 15. உமேஷ் யாதவ், 16. மொகமது ஷமி.

 

Related posts

Leave a Comment

2 × 4 =