இன்றைய ராசிபலன் 13/9/2017

மேஷம்

அதிக கொலஸ்டிரால் உணவைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை அப்செட் செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். உங்கள் காதலரின் அவசியமில்லாத தேவைக்கு அடிபணியாதீர்கள். உங்கள் நேரத்தில் அதிகமானதை பிறக் பெற விரும்பலாம் – அவர்களுக்காக எந்த வாக்குறுதியும் அளிப்பதற்கு முன்னாள் உங்கள் வேலை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் கனிவு மற்றும் தாராள மனதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். இன்று பொறுமயை கடைபிடிக்கவில்லையென்றால் உங்கள் திருமண வாழ்வில் ஒரு தரை இழைத்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம்

இன்று உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். இன்று உங்கள் கலைநயமிக்க, கிரியேட்டிவ் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் அண்டை வீட்டுகார்ர்களுங்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் உங்கள் பந்தத்தை அசைக்க முடியாது.

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம்

உங்கள் மகிழ்ச்சிக்கு பய உணர்ச்சி ஊறாக இருக்கும். நம் சொந்த எண்ணங்கள் மறறும் கற்பனைகளின் பலன்தான் அது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது உடனடியாக உங்களைக் கொல்கிறது – வாழ்வில் ஆனந்தத்தை கெடுத்து திறமையை பாதிக்கிறது – எனவே உங்களை கோழையாக ஆக்கிவிடுவதற்கு முன்பு, முளையிலேயே கிள்ளிவிடுங்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ஆனால் வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். புதிய திட்டங்கள் வரலாம். ஆனால் அவசரமாக முடிவு எடுப்பது புத்திசாலித்தனமல்ல. ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் நினைத்த்து போல இன்று நடக்காது ஆனால் இறுதியாக உங்கள் துணையுடன் அழகான பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

கடகம்

இன்று உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள் – உடல் சக்தி குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. நிச்சயமாக உங்களுக்கு சிறிது ஓய்வு தேவை. கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குழுவில் இருக்கும் போது என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவும் – உங்களின் அழுத்தமான கருத்துகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்படலாம். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம்

 

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது – அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார். ஒரு அருமையான சர்ப்ரைசை ப்ளான் செய்து அவர்களது நாளை இனிமையாக்குங்கள். இன்று ஆபீசில் நாள் முழுவதும் நீங்கள் சிறிது மன கலக்கத்துடன் இருக்க கூடும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி

துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குழந்தைகள் மீது உங்கள் கருத்தை திணிப்பது அவர்களுக்கு மன உளைச்சலை தரும். அவர்கள் அதை ஏற்க முடியும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது நல்லது. இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த வாக்குறுதியும் தராதீர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் திருமண வாழ்வின் ஒரு இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும்.

அதிர்ஷ்ட எண்: 9

துலாம்

இன்று உங்களை சென்டிமென்டல் மனநிலை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் கடந்த காலத்தை மறக்க வேண்டும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நாளை விசேஷமானதாக ஆக்கிட குடும்பத்தினருடன் கேண்டில் லைட் டின்னரை அனுபவியுங்கள். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கிவிடக் கூடாது. உங்களின் முயற்சிக்கு நிச்சயமாக பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். ஒரு உறவினர், நன்பர் அல்லது அண்டை வீட்டாரால் இன்று உங்கள் திருமண வாழ்வில் டென்ஷன் ஏற்பட கூடும்.

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம்

விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதை ஒரு சோம்பேறி. உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். நண்பர்கள் – பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் – டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். சில பிக்னிக் இடங்களுக்கு செல்வதன் மூலம் காதல் வாழ்வை பிரகாசமாக்குவீர்கள். உங்கள் ஐடியாக்களை நன்கு வெளிப்படுத்தி வேலையில் உறுதியையும் ஆர்வத்தையும் காட்டினால் – ஆதாயம் பெறுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு

நண்பர்கள் ஆதரவு அளித்து அங்களை மகிழ்விப்பார்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். மனைவியுடன் தகராறு செய்வது மனதை டென்சனாக்கும். தேவையில்லாமல் அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். நம்மால் மாற்ற முயாதவற்றை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வதே வாழ்க்கையில் நல்ல பாடமாகும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். நீங்கள் நீண்ட காலமாக செய்து வரும் முக்கியமான பிராஜக்ட் தாமதமாகும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 1

மகரம்

இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். பணம் தொடர்பாக நிச்சயமற்ற நிலை உங்கள மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெறரோரும் நண்பர்களும் முடிந்தவரை உதவுவார்கள். தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் அபீசில் செய்ய போகும் வேலை வரும் காலத்தில் நல்ல பலனை உங்களுக்கு தரும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் துணை உங்கள் மேல் சந்தேகம் கொள்ளும்படியான சூழல் இன்று அமையக்கூடும்.ஆனால் இறுதியில் உங்கள் துணைவர்/துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார்.

அதிர்ஷ்ட எண்: 1

கும்பம்

அளவுக்கு அதிகமான கவலை மன அழுத்தம், ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். நண்பர்களும் உறவினர்களும் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் வெளி உலகிற்கு கதவுகளை சாத்திவிட்டு உங்களையே ராஜாபோல நடத்திக் கொள்ள இதுவே சரியான நேரம். வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். நாளின் பிற்பகுதியில் ரிலாக்ஸ் பண்ணுங்கள். உங்கள் நேரத்தில் அதிகமானதை பிறக் பெற விரும்பலாம் – அவர்களுக்காக எந்த வாக்குறுதியும் அளிப்பதற்கு முன்னாள் உங்கள் வேலை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் கனிவு மற்றும் தாராள மனதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 8

மீனம்

மன ஆரோக்கியத்தை பராமரித்திடுங்கள் – அதுதான் ஆன்மிக வாழ்வுக்கு முதல்கட்ட தேவை. மனம்தான் வாழ்வின் நுழைவாயில். ஏனெனில் நல்லது / கெட்டது எதுவும் மனதின் மூலமே வருகிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், முதல்கட்ட தேவையான ஒளியை வழங்கவும் மனம்தான் உதவுகிறது. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். இன்று ஆபீசில் நாள் முழுக்க சிறிது மூட் அவுட்டாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையின் தரம் பாதிப்படையலாம். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்கள் துணை கொடுக்கும் மன அழுத்தத்தால் இன்று உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 5

Related posts

Leave a Comment

two × 5 =