புரோ கபடி 2017: லீக் போட்டிகளில் பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி

12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 6வது கட்டமாக லீக் போட்டிகள் அரியானா மாநிலத்தின் சோனெபத் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று (12-ம் தேதி) நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், அரியானா அணி 27-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. அரியானா அணியின் வசீர் சிங் அதிகபட்சமாக 9 தொடுபுள்ளிகள் எடுத்தார். இப்போட்டியில் வென்ற அரியானா அணி 46 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தோல்வியடைந்த டெல்லி அணி 28 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

‘பீ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. விறுவிருப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெங்கால் அணி 32-31 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்கால் அணி 50 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இன்று ( 13-ம் தேதி ), நடைபெறும் லீக் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் – உ.பி. யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ் – புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

Related posts

Leave a Comment

4 × 5 =