மணிரத்னம் படத்தில் முன்னணி நட்சத்திரங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர் இயக்குநர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

சமீபத்தில் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய `காற்று வெளியிடை’ ரிலீசாகி ஓரளவுக்கு வரவேற்பையே பெற்றது. இந்நிலையில், மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாக இறங்கி இருக்கிறார். அதன்படி அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்த படத்தை மெட்ராஜ் டாக்கீஸ் நிறுவனம் பிரமாண்டதாக தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் வருகிற ஜனவரி 2018-ல் தொடங்க இருக்கிறது.

மேலும் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் விஜய் தேவர்கொண்டாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment

eighteen − three =