இன்றைய ராசிபலன் 18/9/2017

மேஷம்

சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார்.

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம்

தேவையில்லாத டென்சனும் கவலையும் உங்கள் வாழ்வில் சாராம்சத்தை வடியச் செய்து உங்களை சாய்த்துவிடும். இவற்றை ஒழித்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பிரச்சினைகளை இவை அதிகரிக்கும். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். உங்களின் தாறுமாறான நடவடிக்கையிலும் துணைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம்

நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள் – ஆனால் யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் வாழ்க்கையில் உள்ள குழப்பங்களை காரணம் காட்டி இன்று உங்கள் துணை சண்டையிடக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 9

கடகம்

உடல் நல பிரச்சினைகளுக்காக நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். காதலுக்கு உரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் அவர்கள் மன உளைச்சல் அடைவார்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம்

அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும்.

அதிர்ஷ்ட எண்: 2

கன்னி

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். கோளாறான உங்களின் நடத்தை அன்புக்குரியவருடன் மோதலை ஏற்படுத்தும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம்.

அதிர்ஷ்ட எண்: 1

துலாம்

நல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம்

குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். உங்கள் வாழ்வில் முக்கியமானவர்களிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு

உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று காதல் செய்ய இனியான பொழுது உங்கள் இருவருக்கும் வாய்க்கும்.

அதிர்ஷ்ட எண்: 2

மகரம்

எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். நண்பர்களும் நெருக்கமானவர்களும் உதவிக் கரம் நீட்டுவார்கள். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். ரொமான்ட்டிக் பாடல்கள், மணம் வீசும் மெழுகுவத்திகள், உற்சாக பானம் என இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடன் இன்பம் தான்.

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம்

தகராறு செய்யும் நடத்தையை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் உறவுகளை நிரந்தரமாக பாதிக்கும். திறந்த மனது மற்றும் பிறரிடம் உள்ள தவறான கருத்தை கைவிடுவதால் இதை நீங்கள் வெற்றி கொள்ளலாம். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் – நீங்கள் நேசிப்பவரை காயப்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் துணை சிறிது வித்யாசமாக இன்று நடந்து கொள்வார். அதனால் பொறுமை அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 9

மீனம்

உங்கள் முகத்தில் புன்னகை நீங்காத நாள். புதியவர்கள் கூட தெரிந்தவர்கள் போல தோன்றுவர். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் – மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஒருதலை மோகம் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். உங்கள் அலுவலக வேலை இன்று உங்கள் துணையின் நடத்தையால் பாதிப்படையும்.

அதிர்ஷ்ட எண்: 6

Related posts

Leave a Comment

16 + sixteen =