இன்றைய ராசிபலன் 19/9/2017

மேஷம்

நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். மற்ற நாட்களை விட இன்று உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். உங்கள் துணையுடனான இன்ப உரையாடல் மூலம் நீங்கள் ஒருவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என இன்று தெரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம்

நல்ல ஆரோக்கியம் இருந்தால் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள்தான் மையமானவராக இருப்பீர்கள். ரொமான்சுக்கு நல்ல நாள் எந்த புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் கையெழுத்திடாமல் தள்ளியிருங்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலா உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பாசிட்டிவ் எண்ணங்களுடன் பயனுள்ள தன்மையின் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு பயன் கிடைப்பதற்காக நிறைய யோசனைகளுடன் உங்கள் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார்.

அதிர்ஷ்ட எண்: 8

கடகம்

உங்கள் விருப்பத்தின்படி குழந்தைகள் நடக்க மாட்டார்கள் – அது உங்களை ஆத்திரம் அடையச் செய்யலாம். கட்டுப்படுத்தாக கோபம் வழக்கமாக எல்லோரையும் காயப்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்த்திடுங்கள். கோபம் அடைபவரையும் அது பாதிக்கும். ஏனெனில் அது சக்தியை வீணடித்து நியாயத்தைக் கண்டுபிடிக்கும் தன்மையைக் குறைக்கும். அது பிரச்சினையை பெரிதாக்கத்தான் உதவும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். இன்று ஆபீசில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம்

உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். அக்கறையில்லாத நடத்தையால் வீட்டில் நீங்கள் குற்றச்சாட்டுகளை சந்திப்பீர்கள். உங்கள் காதலர் அளவுக்கு மீறி புகழக் கூடும் – இந்த உலகில் என்னை தனியாக விட்டுவிடாதே என்று – கவனமாக இருங்கள். இன்று அபீசில் அதிக அன்பினை னீங்கள் உணர முடியும். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். னீங்கள் திருமண பந்த்துத்துக்குள் நுழயும் முன் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அனைத்தும் நிஜமாக கூடும். உங்கள் துணை உங்கள் உயிரில் கலந்தவர்..

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி

பிறருடன் கூடிப் பழகுவதில் உள்ள பயம் உங்களுக்கு பதற்றமாக இருக்கலாம். அதை நீக்குவதற்கு தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். எதிர்பாராத நல்ல செய்தி உங்கள் உற்சாகத்தை ஊக்கப்படுத்தும். உங்கள் குடும்பத்தினரிடம் அதைப் பகிர்ந்து கொள்வது அவர்களுக்குப் புத்துணர்வு தரும். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்கள் அண்டை வீட்டாரின் சொற்படி உங்கள் துணை இன்று வாக்குவாதத்தில் ஏடுபட கூடும்.

அதிர்ஷ்ட எண்: 3

துலாம்

கிரியேட்டிவான ஹாபிகள் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். காதலின் வலியை உணர்வீர்கள். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள் – உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணையுடன் ஆலோசிக்காமல் ஏதெனும் நீங்கள் திட்டமிட்டிருந்தால் அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம்

உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள நிறைய நேரம் கிடைக்கும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். அதுதான் குணமாக்குதலுக்கு சிறந்த வழி. எல்லையில்லா மகிழ்ச்சியின் ஆதாரமாக அவர்கள் இருப்பார்கள். காதலுக்கு உரியவரின் நடத்தையால் உணர்ச்சிவயப்படுவீர்கள் – நிதானத்தை இழக்காதீர்கள். வாழ்நாள் முழுக்க உங்களை நீங்களே சபித்துக் கொள்ளும் வகையில் பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாமல் தவிர்த்திடுங்கள். உங்களை உங்கள் உடன் பணிபுரிபவர்களும் சீனியர்களும் எவ்வளவு தான் கோபமடைய செய்தாலும் புத்தரை போல இன்று அமைதியை கடைபிடிப்பது நல்லது. கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். உங்கள் துணையின் மேல் உங்களுக்கு இன்று சந்தேகம் வரக்கூடும். இதனால் உங்கள் இருவரின் அமைதியும் பாதிக்ககூடும்..

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு

எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் களைப்படைவீர்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. சரியான நேரத்தில் செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்வைக் காப்பாற்றுவீர்கள். அந்தச் செய்தி உங்கள் குடும்பத்தினரை பெருமை அடையச் செய்து உற்சாகம் கொடுக்கும். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். இன்று வாழ்க்கையே இனிமையாக உங்களுக்கு தோன்றும் ஏன் என்றால் உங்கள் துணை உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ப்ளான் வைத்துள்ளார்.

அதிர்ஷ்ட எண்: 4

மகரம்

சுற்றியுள்ளவர்கள் அதிகம் எதிர்பார்ப்பதை உணர்வீர்கள் – உங்களால் இயலக் கூடியதற்கு அதிகமாக வாக்குறுதி தராதீர்கள் – மற்றவர்களை மகிழ்விப்பதற்காக நீங்கள் அதிகம் உழைக்காதீர்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். தன் வாழ்வைவிட ுங்களை அதிகம் நேசிக்கும் நபரை சந்திப்பீர்கள். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்,

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம்

ஓய்வெடுத்துக் கொண்டு, வேலைக்கு இடையே முடிந்தவரை ரிலாக்ஸ் பண்ண முயற்சி செய்யுங்கள். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். உறவினர்கள் உங்கள் துயரத்தில் பங்கெடுப்பார்கள். உங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அவற்றைத் தீ்ர்த்துவிடுவீர்கள். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். இன்று நீங்கள்தான் கவனிக்கப்படுவீர்கள் – வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும்.

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்

அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். நாளின் பிற்பகுதியை உற்சாகமானதாகவும் பொழுதுபோக்கானதாகவும் ஆக்கிட ஏதாவது பிக்ஸ் பண்ணுங்கள். காதல் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது. உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் துணையின் உடல் பாதிப்பு இன்று உங்களை கவலையில் ஆழ்த்தும்..

அதிர்ஷ்ட எண்: 9

Related posts

Leave a Comment

one × 5 =