இன்றைய ராசிபலன் 22/9/2017

மேஷம்

வேலையிலும் வீட்டிலும் சில அழுத்தங்கள் சட்டென கோபத்தை ஏற்படுத்தும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. இன்று ஆபிசில் உங்கள் மொபைல் போனால் சில ப்ரச்சனைகள் தோன்றலாம். எனவே அதனை அதிகம் இன்று பயன்படுத்த வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம்

கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக சாலைகளின் சந்திப்பில். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். மக்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஏற்படுத்துவார்கள் – ஆனால் உங்கள் சொந்த முயற்சியை வைத்தே அவை அமையும். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள் – உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். சில சமயம், திருமண வாழ்வின் மேல் எரிச்சல் ஏற்படலாம். இன்று அப்படிப்பட்ட நாள்.

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம்

வாயுக் கோளாறு உள்ள நோயாளிகள் எண்ணெய் உள்ள மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். அது நோயை அதிகரிக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது – அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார்.

அதிர்ஷ்ட எண்: 1

கடகம்

உங்கள் முகத்தில் புன்னகை நீங்காத நாள். புதியவர்கள் கூட தெரிந்தவர்கள் போல தோன்றுவர். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். மனைவியுடன் ஷாப்பிங் செல்வது உடனடி மகிழ்ச்சி தரும். உங்களுக்கு இடையில் புரிதலை அதிகரிக்கவும் அது உதவும். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் துணையுடனான இன்ப உரையாடல் மூலம் நீங்கள் ஒருவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என இன்று தெரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம்

அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். இன்று உங்கள் கலைநயமிக்க, கிரியேட்டிவ் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்கள் துணையின் உடல் நல பாதிப்பால் நீங்கள் ஒருவரை சந்திக்க எண்ணியிருந்த திட்டம் பாதிக்கும். ஆனால் இதன் மூலம் உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட முடியும்.

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி

ஆன்மிகவாதி ஒருவர் ஆசிர்வாதம் தந்து மன அமைதியை ஏற்படுத்துவார். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். உறவினர்கள் உங்கள் துயரத்தில் பங்கெடுப்பார்கள். உங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அவற்றைத் தீ்ர்த்துவிடுவீர்கள். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். நீங்கள் நீண்ட காலமாக செய்து வரும் முக்கியமான பிராஜக்ட் தாமதமாகும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.

அதிர்ஷ்ட எண்: 1

துலாம்

கடந்த காலத்தைய மோசமான முடிவுகள் இன்று உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் – நீங்கள் ஆதரவின்றி நிற்பதாக, அடுத்து என்ன முடிவெடுக்க முடியாதவராக இருப்பீர்கள் – மற்றவர்களின் உதவியை நாடுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் வீட்டைச் சுற்றி உடனடியாக சில சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவருடன் பிக்னிக் சென்று மதிப்புமிக்க நினைவுகளை மறுபடி கொண்டு வாருங்கள். பிசினஸ் மீட்டிங்குகளில் அதிகம் பேசுபவராகவோ உணர்ச்சிவயப்படவோ செய்யாதீர்கள் – உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் நற்பெயரை சீக்கிரம் கெடுத்துக் கொள்ளக் கூடும். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்..

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம்

சரியான உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். எண்ணெய் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் – ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். உண்மையான காதலர் கிடைக்காமல் இருப்பதால் உங்களுக்கு ரொமான்சுக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் வேலையில் இன்று ஒரு நல்ல முன்னேற்றத்தை காணலாம். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு

இன்று அமைதியாக – டென்சன் இல்லாமல் இருங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைவரை புறக்கணித்தால் உறவு பாதிக்கப்படலாம். அவருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியான பொன்னான நாட்களின் நினைவுகளை திரும்பக் கொண்டு வாருங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும். உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணையின் தேவைகள் இன்று உங்களை சலிப்படைய செய்யலாம்.

அதிர்ஷ்ட எண்: 2

மகரம்

நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செலவிடாத குணமும் அதிக பயன் தரும். பிசியான பணி அட்டவணையிலும் நீங்கள் களைப்பை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். இன்று உங்களுக்கு புதிய தோற்றம் – புதிய அவுட்பிட் – புதிய நண்பர்கள் அமையலாம். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம்

வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் மூலமாக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரொமான்ஸ் – வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்கள் துணையின் மேல் உங்களுக்கு இன்று சந்தேகம் வரக்கூடும். இதனால் உங்கள் இருவரின் அமைதியும் பாதிக்ககூடும்..

அதிர்ஷ்ட எண்: 9

மீனம்

நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் – முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். ஷாப்பிங் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது – ஆனால் முக்கியமில்லாத பொருட்களுக்கு நீங்கள் செலவு செய்யாவிட்டால் துணைவரை அப்செட் செய்வீர்கள். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். சகாக்கள் உரிய நேரத்தில் உதவி செய்வதால், வேலையில் உள்ள கடினமான நேரங்கள் கடந்து போகும். உங்களின் தொழில் திறமையை மீட்டெடுக்க அது உதவும். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று உங்கள் துணை தனது இனிமையான பக்கத்தை காட்டுவார்.

அதிர்ஷ்ட எண்: 7

Related posts

Leave a Comment

4 × four =