தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்டு) பெரும்பாலான நாட்களும், இம்மாதத்தில் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலும் பவுன் ரூ.23 ஆயிரத்தை தாண்டி விற்றது. அதன் பின்னர் விலை படிபடியாக குறைந்து பவுன் ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்தது.
நேற்று ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 656 ஆக இருந்தது. அன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.392 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 48 ஆக உள்ளது.
இதன்மூலம் தங்கம் விலை 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் பவுன் ரூ.23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அது ஏழை-எளிய நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கிராமுக்கு ரூ.49 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,881-க்கு விற்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவு மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.40-க்கு விற்கிறது.