மருத்துவ கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக உருவாகிறது “ பொட்டு “

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  –  வடிவுடையான்.
 படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்..
இந்த படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள்.
மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த  அகோரியாக நமீதா  நடிக்கிறார்.
இனியா மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில்  படு பயங்கரமான ஹாரர் படமாக பொட்டு உருவாகி உள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தொடர்ந்து அம்ரீஷ் இசையில் உருவாகும் இரண்டாவது படம் இது. படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related posts

Leave a Comment

fifteen + twelve =