துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு! ட்ரம்ப் உறுதி!

அமெரிக்காவின் சவுத்ஈஸ்டர்ன் லூசியானா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அமெரிக்காவில் அண்மைக் காலமாக பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிச்சூடு அதிகரித்து வருகிறது. கடந்த 14-ந் தேதி புளோரிடா, பார்க்லேண்ட் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். ஏற்கனவே தங்கு சர்வசாதாரணமாக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. பார்க்லேண்ட் சம்பவத்தில் உயிர் தப்பிய மாணவர்கள், புளோரிடா தலைநகர் டலஹாசியில் சட்டசபை முன் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஒரே நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ரவுண்டுகள் சுட்டுத்தள்ள துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் கருவிக்கு தடை விதிக்க டிரம்ப் முடிவு எடுத்துள்ளார்.செமி ஆட்டோமேடிக் துப்பாக்கிகளில் இந்த கருவியை பொருத்தி விட்டால், அது இயந்திர துப்பாக்கியாக மாறிவிடும்.

பல நூறு ரவுண்டுகள் சுடும். லாஸ்வேகாஸ் இசை விழா துப்பாக்கி சூடு சம்பவத்திலும் இந்த கருவி பயன்படுத்தப்பட்டிருந்தது. பம்ப்ஸ்டாக் எனப்படும் இந்த கருவிை வெறும் 100 டாலருக்கு எளிதாக வாங்க முடியும்.இந்த தடை குறித்து ட்ரம்ப் குறிப்பிடும்போது, ‘’வெற்று பேச்சுகள், அர்த்தமற்ற விவாதங்களைக் கடந்து உருப்படியான தீர்வை நோக்கி நாம் செல்ல வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதில் முதல்கட்ட மாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்ட அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.இதற்கு முன்பும் அமெரிக்காவில் நடந்த பல துப்பாக்கிச்சூடு சம்பவங்களின்போது, துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இம்முறைதான் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment