ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0, பா.இரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த காலா திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். கபாலிக்கு முன்னதாகவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்கள் சலசலக்கப்பட்டது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை இயக்குவது உறுதியாகிவிட்டது.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது பிரபுதேவாவை வைத்து மெர்குரி எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் 13-ல் வெளியாகிறது.

ரஜினி அரசியலிலும் தீவிரம் காட்டிவரும் நிலையில் திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதேவேளையில், கமல்ஹாசனோ இனி நடிக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து களத்தில் இறங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment