ஜம்மு-காஷ்மீரி உள்ள அமர்நாத் யாத்திரை ஜூன் 28ல் தொடக்கம்!

அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இயற்கையே இறைவனின் வடிவம்தான் என்பதை உலகம் ஆங்காங்கே எடுத்துக்காட்டி வருகிறது. அதில் முக்கியமான ஓர் இறைவடிவம் அமர்நாத் பனிலிங்கம். பிரமாண்டமான ஒரு குகையில் சுயம்புவாக பனிக்கட்டியால் உருவாகும் வெண்ணிற லிங்க வடிவத்தைக் காண ஆண்டுதோறும் மக்கள் வெள்ளம் கூடும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாத காலத்தில் சுமார் 60 நாள்கள் வரை இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின்  அமர்நாத் ஏரியாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடும் குளிரில் வந்து இறைவனின் தரிசனத்தைக் காண்பார்கள். இந்த ஆண்டு யாத்திரை ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த யாத்திரை செல்வதற்காக முன்பதிவு செய்துள்ளார்கள்.

5,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான ஒரு குடைவரைக் கோயில் பனிலிங்கத்தைத் தரிசிக்க இந்துக்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களும் வந்து தரிசிக்கிறார்கள். இந்தப் பனிலிங்கத்தைக் கண்டறிந்து சொன்னதே ஒரு இஸ்லாமிய சிறுவன் என்பது வியப்பான உண்மை. தீவிரவாத அச்சுறுத்தல், கடுமையான குளிர் எனத் தடைகள் பல இருந்தாலும் இந்தியா மட்டுல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் மக்கள் கூட்டம் பனிலிங்கத் தைத் தரிசிக்கக் கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டு இங்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment

18 − one =