சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.

அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், புதிய பட அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து இப்படம் குறித்து புதிய புதிய தகவல்களும் வெளியாகி கொண்டிருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ், ரஜினி, அனிருத் ஆகிய மூவரும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடந்து வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவில்லை என்றும், ரஜினியின் தம்பியாக நடிக்கிறார் என்றும் புதிய தகவல் பரவி வந்த வெளியாகி வந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ரஜினியுடன் விஜய் சேதுபதி முதல்முறையாக இணையவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து விஜய் சேதுபதி இந்த படத்தில் ரஜினியின் தம்பி அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பாரா? என்று ஆளாளுக்கு ஹேஸ்யங்களிஅ கிளப்பியபடி உள்ளனர். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது

Related posts

Leave a Comment