குழந்தைகளை சுமோ வீரர்கள் மூலம் அழ வைத்து ரசிக்கும் பெற்றோர் – ஜப்பான் விநோதம்

: ஜப்பான் நாட்டில் சுமோ வீரர்கள் குழந்தைகளை அழ வைத்து விளையாட, அதைப் பெற்றோர் கண்டு ரசிக்கும் வினோ திருவிழா நடைபெறுகிறது.

ஜப்பான் நாட்டு சுமோ குத்துச் சண்டை வீரர்களின் குண்டான தோற்றமும், உடல் வாகும் பார்வை யாளர்களுக்கு நகைப்பளிக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது. ஆனால் சுமோ வீரர்கள், குழந்தைகளை அழ வைத்து ரசிக்கும் திருவிழா அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டோக்கியோவில் உள்ள சென்சோஜி கோயிலில் நடைபெற்ற கிரையிங் சுமோ திருவிழாவில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

400 ஆண்டுகள் பழமையான இந்த திருவிழாவில் சுமார் 160 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதில் சுமோ வீரர்கள் இருவர் தங்கள் கையில் ஆளுக்கு ஒரு குழந்தையை ஏந்தியபடி, எதிர் எதிரே நின்று கொள்வர். பின் குழந்தைகளை அழ வைத்து வேடிக்கை பார்பர்.

இதனை குழந்தைகளின் பெற்றோரும் கண்டி ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்வர்.

ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற சடங்குகள் நடைபெறுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், தீமை நெருங்காது என ஜப்பானிய மக்கள் நம்புகிறார்கள்.

Related posts

Leave a Comment