மம்மூட்டி நடிக்கும் பேரன்பு படத்தின் டீசர் ரிலீஸ்!

மம்மூட்டி நடிக்கும் பேரன்பு படத்தின் முதல் டீசர் நேற்று (ஜூலை 15) வெளியாகியுள்ளது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புக்களை கொடுத்தவர் இயக்குநர் ராம். ‘தரமணி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேரன்பு’. இதில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப் பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்த துள்ளதால் ரசிகர்கள் மட்டுமில்லாது சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

அதிலும் நான்காவது முறையாக யுவனே இசையமைக்கும் இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. அமைதியாகத் துவங்கும் அந்த டீசரின் இறுதிக்காட்சி, ‘‘யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒருவரை மற்றொருவருடன் ஒப்பீடு செய்வதும் ஒரு வன்முறைதான்’’ எனும் ஆழமான கருத்தை போகிற போக்கில் முன்வைக்கிறது.

மகளைப் பிறருடன் ஒப்பீடு செய்து, பின் மனம்வருந்தும் ஒரு தந்தையின் வலியை உணர்த்தும்விதமாக இந்த டீசர் அமைந்திருக்கிறது. அடுத்த ஞாயிறு அன்று இரண்டாவது டீசர் வெளியிடப்படும் எனும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

13 − 12 =