விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பில், “மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலின் திங்கள்கிழமை அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலினி மற்றும் நண்பர்கள் திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, மதுரை – திண்டுக்கல் சாலையில், பொட்டிகுளம் அருகே கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த ஷாலினி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஷாலினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மாலை முரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலினியின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

Leave a Comment

18 + ten =