காண்ட்ராக்டர் செய்யாதுரை அலுவலகம், வீடுகளில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாதுரை, அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறை இரண்டாவது நாளாக  நடந்த சோதனை முடிவுக்கு வந்தது!

தமிழகத்தில் எஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளரும், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று (ஜுலை-16) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள செய்யாதுரை, அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடதப்பட்டு வருகிறது.

இதையடுத்து, செய்யாதுரை வீட்டில் மூட்டை மூட்டையாக ரூ.100 கோடி பணம் கிடைத்துள்ளதாக வருமான வரித் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 100 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று 2 ஆம் நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் செய்யாதுரை, அவரது மகன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை தொடர்ந்தது.

சென்னை உட்பட 30 இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில் தற்போது வரை மொத்தமாக 160 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. பெரம்பூரில் 81 கிலோ, தாம்பரத்தில் 19 கிலோ என 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது .

சற்றுமுன் வந்த தகவல்படி  36 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் நடந்த சோதனை நிறைவடைந்தது. 2 நாள் சோதனையில் கணக்கில் வராத ரூ.170 கோடி பணம் கைப்பற்றப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

seventeen − thirteen =