விசா இன்றி பயணம் செய்ய அனுமதிக்கும் நாடுகள்!

விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதியை அளித்துள்ள நாடுகளின் பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நேஷனல் ஏர் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசன் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் விசா இல்லாமல் அதிகமான நாடுகளுக்கு செல்வதற்கான பாஸ்போர்டுகளை வழங்கும் நாடுகள் என்ற வகையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும்  சுமார் 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யும் வகையிலான பாஸ்போர்ட்டுகளை வழங்குகின்றன. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜெர்மனி தற்போது  2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றுள்ள நாடுகள்:

  • ஜப்பான், சிங்கப்பூர்
  • ஜெர்மனி
  • டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், ஸ்பெயின், தென்கொரியா.
  • நார்வே, லண்டன், ஆஸ்திரியா, லக்ஸ்ம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், அமெரிக்கா.
  • பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா
  • ஆஸ்திரேலியா, கிரீஸ்
  • நியூசிலாந்து, செக் குடியரசு, மால்டா
  • ஐஸ்லாந்து
  • ஹங்கேரி, ஸ்லோவெனியா, மலேசியா
  • ஸ்லோவேகியா, லாட்வியா, லித்துவேனியா

Related posts

Leave a Comment