ஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கன்பியூசன்!

மறைந்த முதல்வர் ஜெ. மரணச் சர்ச்சைக் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானவர்களின் வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பாளராக இருந்த சாமுண்டீஸ்வரி இன்று ஆஜாரானர் ஜெயலலிதா சிகிச்சை அறைக்கு உள்ளே சென்று பார்க்க பிரத்தியேக உடை அணிந்து செல்லலாம் என்று தெரிவித்த அவர், ஆளுநர் உள்ளே சென்று பார்க்காமல் ஏன் கண்ணாடி வழியாக பார்த்தார் என தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மாரடைப்பு ஏற்பட்டு டிசம்பர் 4-ஆம் தேதியே வழக்கமான அறையில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு எக்மோ கருவி பொறுத்தப்பட்டதாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே தெரிவித்த நிலையில் 5-ஆம் தேதி ஜெயலலிதா வழக்கமான 2008-ஆம் எண் அறையில் இருந்ததாக சாமுண்டீஸ்வரி கூறியுள்ளார்.

ஜெயலலிதா இறந்தாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5-ஆம் தேதி வழக்கமான 2 பணி மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள் மட்டுமே இருந்ததாக சாமுண்டீஸ்வரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அபாயகரமான நிலையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு எப்போது மூச்சு வரும் எதிர்பார்க்கும் நிலையில், கூடுதல் மருத்துவர்கள் இல்லாமல் வழக்கமான சூழல் இருந்தது ஏன்? என்ற ஆணைய வழக்கறிஞரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் சாமுண்டீஸ்வரி திணறியதாகவும் கூறப்படுகிறது.

அப்போலோ ஆம்புலன்ஸ் ஊழியரான அனிஸ் அளித்த வாக்குமூலத்தில், 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி போயஸ் கார்டனில் ஜெயலலிதா முனக மட்டுமே செய்ததாக கூறியுள்ளார். சசிகலா, டாக்டர்கள் சிவக்குமார், சினேகா மற்றும் தான் மட்டுமே ஆம்புலன்ஸில் ஏறி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் ஆம்புலன்ஸில் வந்ததாக அவர் கூறவில்லை.

மேலும் அவசர சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லும் வரை தான் உடன் இருந்ததாகவும், அப்போதுவரை ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாகவும், யாருடனும் பேசவில்லை என்றும், அவருடனும் வேறு யாரும் பேசவில்லை என்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஜெயலலிதாவுடன் சசிகலா கிரிம்ஸ் சாலையில் பேசினார் என்றதும், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த பின் ஜெயலலிதா சுயநினைவு திரும்பியதாக மருத்துவர் சிவக்குமார் கூறியதும், போயஸ்கார்டனில் படிக்கட்டு இறங்கும் போது ஜெயலலிதாவுடன் டாக்டர் சிவக்குமார் பேசியதாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கூறியதுமான வாக்குமூலங்கள் முரண்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment

9 + eleven =