இந்தியருக்கு அபுதாபி லாட்டரி மூலம் ரூ.19 கோடி ஜாக்பாட்!

அபு தாபியில் நடத்தப்படும் மெகா குலுக்கல் லாட்டரியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பரிசுகளை தட்டி செல்கின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாழப்பள்ளி யோகனன் சிமன் என்பவர் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட பிக் டிக்கெட் லாட்டரி டிக்கெட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் இன்று நடந்தது. அதில் வாழப்பள்ளி யோகனன் சிமனுக்கு ₹19 கோடி(ஒரு கோடி திர்ஹாம்) பரிசு கிடைத்துள்ளது.

முதலில் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது என்று விளையாட்டாகக் கூறுகிறார்கள் என நினைத்துக் வாழப்பள்ளி யோகனன் கண்டுகொள்ளவில்லை. யோகனனை தொலைப்பேசியில் அழைத்து, அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தபோது லாட்டரியில் பரிசு விழுந்ததை அவர் நம்பினார். அதன்பின் அதிகாரப்பூர்வமாக அறிவித்து யோகனனுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து வாழப்பள்ளி யோகனன் சிமன் கூறுகையில், ”உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். முதலில் இந்த செய்தியை எனக்குக் கூறியவுடன் என்னை நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள் என நினைத்து நம்பவில்லை, எனக்கு அதிகார பூர்வமாக அதிகாரிகள் தகவல் அனுப்பியபின்புதான் நம்பினேன்” என்று கூறினார்.

குலுக்கலில் மொத்தம் 10 பேருக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 9 பேர் இந்தியர்கள். ஒருவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். அபுதாபியில் நடந்து வரும் குலுக்கல் லாட்டரியில் தொடர்ந்து இந்தியர்கள் பரிசுகளை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் இந்தியர் ஒருவருக்கு 19 லட்சம் அமெரிக்க டாலர் அபுதாபி லாட்டரியில் பரிசாகக் கிடைத்தது. அவர் அரபு நாட்டைவிட்டுக் கிளம்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குலுக்கலில் இந்தப் பரிசு கிடைத்தது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜான் வர்கீஸ் என்ற கேரள டிரைவருக்கு 1.20 கோடி திர்ஹாம் குலுக்கல் லாட்டரியில் பரிசாகக் கிடைத்ததுள்ளது. ஜனவரி மாதம் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு 1.2 கோடி திர்ஹாம் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபி லாட்டரியில் நடத்தப்பட்ட மெகா குலுக்கல் போட்டியில் 10 பேர் பரிசு வென்றனர். அதில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment

eight − 3 =