விநாயகர் சதுர்த்தி விழாவினைக் கொண்டாடுவதற்கான 24 விதிமுறைகள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் செல்வது தொடர்பான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

செப்டம்பர் 13ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, மக்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் விநாயகர் சிலைகளைச் செய்து, அதற்கு பூஜை செய்வர். மூன்று நாட்கள் கழித்து ஆறு, குளம் அல்லது கடலில் அந்தச் சிலைகளைக் கரைத்துவிடுவார்கள்.

விநாயகர் சதுர்த்தி விழாவினைக் கொண்டாடுவதற்கான 24 விதிமுறைகளை வகுத்துள்ளது தமிழக அரசு.

அந்த விதிமுறைகள் பின்வருமாறு:

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல், தீயணைப்பு, உள்ளாட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனப் பொருட்களையோ, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ரசாயன வண்ணங்களையோ சிலைகளில் பயன்படுத்தக்கூடாது.

சிலை வைக்கப்படும் பந்தல் எரியும் தன்மை உடையதாக இருக்கக்கூடாது.

வெடி பொருட்களை சிலை அருகே வைக்கக்கூடாது.

சிலையின் உயரம் மேடையிலிருந்து பத்தடி வரை தான் இருக்க வேண்டும்.

பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கட்டாயமாக சிலைகள் வைக்கக்கூடாது.

கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது.

காலை, மாலை வேளைகளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பாடல்கள் ஒலிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டும்.

சட்டவிரோதமாக மின் இணைப்பை ஏற்படுத்தக்கூடாது.

குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பக்கூடாது.

ஐந்து நாட்களுக்குள் சிலை கரைக்கப்பட வேண்டும்.

மசூதி, தேவாலயங்கள் இல்லாத வழிகளில் விநாயகர் சிலையைக் கொண்டுசெல்ல வேண்டும்.

வாண வேடிக்கைகள் பயன்படுத்தக்கூடாது.

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தபின்னர், பூ மற்றும் அலங்காரப் பொருட்களை அகற்றிய பின்னரே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும்

கடல், ஏரி, குளங்களில் கரை ஒதுங்கும் சிலைக் கழிவுகளை உள்ளாட்சி துறையினர் 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

4 × one =