அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளை ஒப்படைப்பதில் தாமதம்!

உலகளவில்தன்னை பெரியண்ணாவாக நினைத்து கொள்ளும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளில் 565 குழந்தைகளை இன்னும் அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2000த்துக்கும் அதிகமானனோர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த குழந்தைகள் பிரிக்கப்பட்டு தனியே காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்

.இவ்வாறு அடைக்கப்படும் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் ஜூலை 26ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜூலை 26ம் தேதியை தொடர்ந்து, அடுத்து மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் 565 குழந்தைகள் இன்னும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் காப்பகங்களில் தனியாக உள்ளன.

இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை அரசு சமர்ப்பித்து உள்ளது. காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள் 565 குழந்தைகளில் 366 குழந்தைகளின் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து வெளியே உள்ளனர். அதனால் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைப்பது சிரமமாக உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

5 × 5 =