நயன்தாரா -வின் `கோலமாவு கோகிலா’ திரைப்படம் முதல்நாளே வசூலில் சாதனை!

நயன்தாரா நடிப்பில் வெளியான `கோலமாவு கோகிலா’ திரைப்படம் முதல்நாளே வசூலில் சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சிப் பிரபலம் ஜாக்குலின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இப்படம் வெளியானது.

நாயகியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்குத் தொடங்கியது. இதுவரை பெரிய நடிகர்களின் படம் மட்டுமே சிறப்புக் காட்சிகளாக திரையிடப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா அதை முறியடித்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளில் தமிழகம் முழுவதும் ₹3.4 கோடி வசூல் செய்து சாதித்துள்ளது. சென்னையில் மட்டும் இப்படம் ₹44 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது. நாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் இதுவே முதல்நாளில் அதிகபட்ச வசூலாகும்.

Related posts

Leave a Comment

one × four =