அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் மார்ஷலாக கௌரவிக்கப்பட்டார்!

“நம்மைப் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் நாம் இயங்குவதற்கான காரணங் களை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை” என்று நடிகர் கமல் ஹாசன் அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதனையடுத்து இந்திய சுதந்திரத்தைப் போற்றும் வகையில் நேற்று இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி நியூயார்க்கின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அப்போது மாடிசன் அவென்யூவில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றுகூடி அணிவகுப்பில் பங்கேற்றனர். அதில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மார்ஷலாக நடிகர் கமல்ஹாசன் கௌரவிக்கப்பட்டார். அவருடன் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகை பூஜா குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “நம்மைப் பற்றிய செய்திகள் பரவலாக இருந்தாலும் நாம் இயங்குவதற்கான காரணங்களை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. விரைவில் புரியும். மக்கள் நலன் எனும் ஒரு குடையின் கீழ் பணி செய்யும் தொண்டர்கள் அங்கிருக்கிறார்கள். இங்கிருந்து நான் செல்வதும் மக்கள் பணி நோக்கித்தான். நமது கேரளம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனே செல்ல வேண்டும்” என்று பேசினார்.

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கமல் பங்கேற்றார். விஸ்வரூபம் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Related posts

Leave a Comment

4 × 1 =