வாக்காளர் பட்டியலில் நடிகை, மான், புறா !- உ.பி. யில் நட்ந்த கூத்து!

உத்தரப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் நடிகை, மான், புறா போன்ற புகைப்படங்கள் இடப்பெற்றுள்ளதால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில், பாலிவுட் திரைப்பட நடிகை சன்னி லியோன் புகைப்படத்தை இணைத்து, 51 வயது உள்ள பெண்ணின் விவரத்துடன் பட்டியலில் தகவல்கள் இடப்பெற்றிருந்தது. அத்துடன் யானை, மான், புறா போன்றவற்றின் புகைப்படங்களும் வேறு சில வாக்காளர்களின் விவரங்களுடன் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், வாக்காளர்களின் சரியான புகைப்படம் இணைப்பதற்கு பதிலாக, மிருகம், நடிகை போன்ற படங்களை இணைத்ததற்கு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து,  மாவட்ட  நிர்வாக அதிகாரிகள் தரப்பில், ‘பட்டியலில் உள்ள தவறு, உள்ளூர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரால் நடந்துள்ளது. அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

four × four =