நடிகர் விஷால் அதிரடி – தன் ரசிகர் மன்றத்தை  “மக்கள் நல இயக்கம்” என்று பெயர் மாற்றினார்!

கமல் மற்றும் ரஜினிக்கு முன்னரே நேரடி அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷால், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார். ஆனால், சில காரணங் களால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து அவர் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே  “மக்கள் நல இயக்கம்” என ரசிகர் மன்றத்திற்கு பெயர்சூட்டி, கொடியையும் அறிமுகப்படுத்தினார் நடிகர் விஷால்!

விஷால் நடித்து தயாரித்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் 100 நாட்களை கடந்திருக்கிறது. இதனை கொண்டாடும் விதத்தில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த திட்டமிட்ட விஷால், அதனை தனது பிறந்தநாளான்று நடத்தவும் முடிவு செய்தார். அதன்படி இன்று (ஆகஸ்ட் 29) விஷாலின் பிறந்த நாள் என்பதால், இரும்புத்திரை திரைப்படத்தின் 100 வது நாள் விழாவும் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் நாயகி சமந்தா, வில்லனாக நடித்த அர்ஜுன், இயக்குநர் மித்ரன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இரும்புத்திரை படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 100 வது நாள் கேடயம் வழங்கப்பட்டது.

இதையடுத்து “அணி சேர்வோம், அன்பை விதைப்போம்” என்ற வாசகத்துடன் கூடிய தனது ரசிகர் மன்ற கொடி யை அறிமுகம் செய்தார் நடிகர் விஷால். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொடி மற்றும் இயக்கத்தின் பெயரினை அறிவித்தார்.

இயக்கத்தின் பெயர் அறிமுக விழாவில் அவர் பேசியதாவது…

“நிஜ வாழ்வில் நல்லது செய்ய விரும்பும் அனைவரும் அரசியல்வாதிகளே. மக்கள் பிரச்சனை யினை நேரில் சந்திது தீர்த்து வைப்பதே அரசியல் ஆகும்.

ரசிகர்கள் மற்றும் தன்நம்பிக்கையே எனது சொத்து. எனக்கு கார் மட்டுமே சொந்தமாக உள்ளது, சொந்த வீடுகூட இல்லை. எனக்கு சொத்த என சொல்லிக்கொள்ள இருப்பது எனது ரசிகர்கள் மட்டுமே. நல்ல ரசிகர்களை பார்க்கும் போது என் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

வீதியில் நடக்கும் பிரச்சணைகளை பார்த்தும் கேட்காமல் விட்டுவிடுபவர் பினத்திற்கு சமம். என தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment

one × 2 =