செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகள் செயல்படாது என்பது வதந்தி!

செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகள் செயல்படாது என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் வதந்தி என்று நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம் சேவை பெரிதும் பாதிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனால் நேற்று முதலே பல வங்கிகளில் கூட்டம் குவியத்தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த வாரம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை என்பது சரியான தகவல் இல்லை என நிதிஅமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு சில மாநிலங்களில் மட்டுமே திங்கட்கிழமை அன்று ஜன்மாஷ்டமி பண்டிகைக்கான விடுமுறை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 4,5 ஆகிய நாட்களில் பி.எஃப் மற்றும் ஓய்வூதிய பிரச்சனையை முன்வைத்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது. மேலும் செப்டம்பர் 8 இரண்டாவது சனிக்கிழமை என்பதால், அது வழக்கமான விடுமுறை ஆகிறது. இந்த விடுமுறை நேரத்தில் மக்களுக்கு பிரச்னை இல்லாமல் இருக்க ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவுக்கு கரன்சி நோட்டுகளை இருப்பில் வைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related posts

Leave a Comment

4 × 1 =