நெல்லை, பொதிகை விரைவுரயில்களில் நவீன ரக பெட்டிகள் இணைப்பு

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை, திருநெல்வேலிக்கு இயக்கப்படும் பொதிகை மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், எல்.ஹெச்.பி எனும் நவீனரக பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதன்படி சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் 02.09.2018-ம் தேதி முதலும், திருநெல்வேலி – சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் 03.09.2018-ம் முதலும் எல்.எச்.பி கோச்-ஆக மாற்றப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் 04.09.2018ம் தேதி முதலும், செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் 05.09.2018-ம் முதலும் எல்.ஹெச்.பி. கோச்-ஆக மாற்றப்பட உள்ளன.

பொதிகை மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்போது வரை 24 பெட்டிகளாக இயக்கப்படுகிறது. எல்.எச்.பி கோச்-ஆக மாற்றம் செய்யப்பட்ட பின்பு 23 பெட்டிகளாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 ஸ்லீப்பர் கோச்க்கு பதிலாக 11 ஸ்லீப்பர் கோச்சாக – ஆக மாற்றப்பட உள்ளது.

இந்த ரயில் பெட்டிகள் உலக தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளின் வசதிக்காக பயோ கழிப்பறைகள் மற்றும் ஒரு ரயில் பெட்டியில் இருந்து மற்றொரு ரயில் பெட்டிக்கு செல்ல தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் கூடுதல் ஸ்பிரிங்குகள், ரயில்களின் உள்ளே சத்தம் கேட்காத வகையில் இன்சுலேசன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த நவீன ரக ரயில் பெட்டிகள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

Related posts

Leave a Comment

twelve − 9 =