தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடை பெற்று வந்தது. இந்த ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், அம்மாநில ஆளுநரை சந்தித்து, தங்கள் அரசு சட்டசபை கலைத்துக் கொள்கிறது. அதற்க்கான கடிதத்தை கொடுத்தார். அதற்கு ஆளுநரும் ஒப்புதல் கொடுத்து விட்டார்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி அமைத்தது. தெலங்கானாவின் முதலாவது முதலமைச்சராக பொறுப்பேற்றார் சந்திரசேகர ராவ். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளில் சந்திரசேகர ராவின் கட்சி வெற்றி பெற்றது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆட்சி உள்ள நிலையில், முன் கூட்டியே தேர்தலை நடத்த சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். அதற்கு ஏதுவாக தெலங்கானா சட்டப்பேரவையை கலைப்பது குறித்து இன்று காலை அமைச்சரவை கூட்டப்பட்டது. அப்போது தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டப்பேரையை கலைக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் வரும் டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களுக் கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலோடு தெலங்கானா சட்டப் பேரவை தேர்தலையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 2019-ல் ஆட்சி நிறைவடையவுள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க ராஷ்டிரிய சமிதி கட்சி தயாராகி வருகிறது.