சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்போவதில்லை என்று முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்த நிலையில், இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கேரள அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தபோவதாக அறிவித்தார். இதில் கலந்து கொள்ளுமாறு ஐய்யப்பன் கோவிலின் தலைமை தந்திரிகள் மற்றும் கோவிலை முன்பு நிர்வகித்து வந்த பந்தளம் அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்று தலைமை தந்திரியும், பந்தளம் அரச குடும்பத்தினரும் தெரிவித்து உள்ளனர்.

Related posts

Leave a Comment