கருணாநிதி சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக தலைமை திட்டம்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக தலைமை திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவிற்குப் பின் அவரின் புகழை பறைசாற்றும் வகையில் பல்வேறு தலைப்புகளில் புகழஞ்சலி கூட்டங்களை திமுக தலைமை நடத்தி வருகிறது.

குறிப்பாக, அழகிரியின் நெருக்கடிகளுக்கு மத்தியில் அக்கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகே கருணாநிதி சிலையை நிறுவ வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

அதனடிப்படையில், பிரபல சிலை வடிவமைப்பாளர்களான தீனதயாளன், கார்த்திக் ஆகியோரிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

karunanidhi statue

திருவள்ளூர் அருகே மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் 8 அடி உயரத்தில் தயாராகி வரும் அவரது சிலையை, 2 முறை நேரில் பார்த்து ஆலோசனை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.

இந்நிலையில், கருணாநிதி மறைந்து 100-வது நாளான நவம்பர் 15 அன்று தேசிய தலைவர்கள் முன்னிலையில் கருணாநிதி சிலை திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவாலயத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

Leave a Comment

1 × 2 =