பட்டாசு வெடிக்க உச்சநீதி மன்றம் கடும் நிபந்தனைகள்: முழு விவரம்!

நாடு முழுதும் பட்டாசு தயாரிக்கவும், வெடிக்கவும் தடை விதிக்க முடியாது என்று என்று கூறி உள்ள உச்சநீதி மன்றம் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

அதன்படி தீபாவளி அன்று இரவு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுவெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

பட்டாசு வெடிக்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஏ கே சிக்ரி மற்றும் அசோக்பூஷன் ஆகியோரின் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

டில்லி போன்ற நகரங்களில் மாசுபாடு அளவிடமுடியாத நிலைகளை எட்டியுள்ளதை குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு அனுமதி வழஙகி உள்ளது.

தீபாவளி அன்று, இரவு 8 மணி முதல் மாலை 10 மணி வரை, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று இரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே அனுமதி

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மட்டுமே டில்லி, என்சிஆரில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

வரையறுக்கப்பட்ட ஒலி அளவை விட அதிக டெசிபலில் சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்கும் கடைகளுக்கான உரிமம் உடனே ரத்து

இந்த தீர்ப்பு அனைத்து விழாக்களுக்கும் திருமணங்கள் போன்ற செயல்களுக்கும் பொருந்தும்.

குறைக்கப்பட்ட சத்தம் கொண்ட பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும்.

அதிகளவிலான சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும்.

ஆன்லைன் (இ-காமர்ஸ் ) மூலம் பட்டாசு விற்க முடியாது, அவர்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இதுகுறித்து அரசாங்கம் மக்களிடையே விரிவான பொது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட இடங்களில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டால், அதற்கு அந்த பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் , சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அலுவலக அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு பல அதிரடி நிபந்தனைகளை உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

தீபாவளி அன்று உள்பட பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

Leave a Comment

4 × four =