மீண்டும் இணைகிறது ‘ஈட்டி’ வெற்றிக்கூட்டணி

ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா.
திரு மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் ஈட்டி. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
 குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் நாடோடிகள், ஈட்டி மற்றும் மிருதன் போன்ற தரமான கதைகளையும், வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறது. தரமான வெற்றி படங்களை கொடுக்கும் இந்நிறுவனம் தற்போது சிம்பு நடித்து வரும் AAA படத்தையும் மற்றும் தன் 10-வது படமான, ஜீவா – நிக்கி கல்ராணி நடிப்பில் கீ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஈட்டி பட கதாநாயகனான அதர்வாவுடன் மீண்டும் இணைந்து தனது அடுத்த படத்தை துவக்கவுள்ளது.
பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா கதா நாயகனாக நடிக்கிறார். டார்லிங்க், எனக்கு இன்னொரு பேரு இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இப்படத்தை இயக்குகிறார். சாம் ஆண்டனின் காமெடி கலந்த திரைக்கதையும், அதர்வாவின் அர்ப்பணிப்பான நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். படத்தின் மற்ற நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர் மிக விரைவில் அறிவிக்கப்படும்.
ஒரு ஸ்போர்ட்ஸ் மேனின் கதையை எதார்த்தோடு கமர்சியல் அம்சங்களை கலந்து சொன்ன வெற்றிபடம் தான் ஈட்டி. இப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இவ்வெற்றி கூட்டணி தங்கள் அடுத்த படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் துவக்க இருக்கிறது.

Related posts

Leave a Comment